அவதார் 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! எப்போது வெளியாகுது தெரியுமா?

அவதார் 2 திரைப்படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த திரைப்படம் அவதார். அந்தப்படத்தின் 2ம் மற்றும் 3ம் மற்றும் 4ம் பாகங்கள் எடுக்கப்பட்டு வருவதாக 2010ல் அறிவிக்கப்பட்டது.

2018ம் ஆண்டே 2ம் பாகத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சனைகள் மற்றும் FOX நிறுவனத்தை டிஸ்னி வாங்கியதன் காரணமாக தயாரிப்பு பணியில் தாதமம் ஏற்பட்டது. இந்நிலையில் அவதார் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை டிஸ்னி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதன்படி அவதார் 2 திரைப்படம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் 3வது பாகம் 2023ம் ஆண்டிலும் 4வது பாகம் 2027ம் ஆண்டிலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரைப்படங்களையும் ஜேம்ஸ் கேமரூனே இயக்க உள்ளார்.