ஹாஸ்பிடல் அருகே பிச்சை எடுக்கும் பெண்மணிக்கு 125 கோடிக்கு பேங்க் பேலன்ஸ்! அதிர்ந்த அதிகாரிகள்! வாய் பிளந்த மக்கள்! எங்கு தெரியுமா?

லெபான் நாட்டில் பிச்சை எடுத்தே பெண் ஒருவர் கோடீஸ்வரி ஆன அதிசய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது வங்கிக் கணக்கில் தற்போது 125 கோடி லெபனான் பவுண்ட் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?


லெபான் நாட்டின் சிடான் நகரத்தில் மருத்துவமனை ஒன்றின் வாசலில் ஹஜ் வாஃபா முகமது அவத் என்ற பெண் பிச்சை நீண்ட காலமாக பிச்சை எடுத்து வந்துள்ளார். பெண் வறுமையில் வாடுவதால் மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் அவ்வப்போது பிச்சை போட்டு வந்தனர்.

பிச்சையில் கிடைக்கும் பணத்தை சாப்பாடு உள்ளிட்ட செலவுகள் போக மீதியை ஜேடிபி என்ற வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.  இந்நிலையில் ஜேடிபி வங்கி சமீபத்தில் திடீரென மூடப்பட்டுள்ளது.

ஆனாலும் வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணம் திரும்ப கிடைக்கும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்திருந்தது. இதற்கிடையே கடந்த புதனன்று லெபான் மத்திய வங்கியில் இருந்து மருத்துவமனை வாசலில் பிச்சை எடுக்கும் வாஃபா முகமது அவத்துக்கு 2 காசோலைகள் வந்துள்ளது.

அதில் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 37 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 10 வருடமாக மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வந்த பெண் கோடீஸ்வரி என்பது ஆச்சரியமாக உள்ளதாக அங்க இருப்பவர்கள் தெரிவித்தனர்.

நம்மூரில் கோயில், தர்க்கா, தேவாலயம், வணிக வளாகங்கள் வாசலில் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறோம். மருத்துவமனை வாசலில் பொதுவாக பிச்சை எடுப்பதில்லை. அதற்குக் காரணம் ஏற்கனவே நோய்வாய்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களிடம் பிச்சை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்பதால்தான்.

ஆனால் லெபான் நாட்டு மருத்துவமனை வாசலை கூட விட்டுவைக்காத அளவுக்கு வறுமை தழைத்தோங்கி உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.