சீமானை திடீரென சீண்டிய லாரன்ஸ்! பின்னணியில் ரஜினி!

ரஜினிக்காக சீறினாராம் லாரன்ஸ்... உண்மையிலே போன் போட்டு டார்ச்சர் செய்யும் தம்பிகள்


ரஜினிக்கு மண்டைக்கு உள்ளேயும் ஒண்ணுமில்லே, வெளியேயும் ஒண்ணுமில்லே என்று சீமான் பேசிய பேச்சுதான் லாரன்ஸ் திடீரென பொங்கியதற்குக் காரணமாம். ரஜினி திட்டியதைக் கண்டு லாரன்ஸ் ஏன் பொங்க வேண்டும் என்பதற்கும் காரணம் சொல்கிறார்கள்.

முன்பெல்லாம் ரஜினியை யாராவது ஒரு வார்த்தை சொன்னாலே தமிழகம் கொந்தளிக்கும். ஏன், ரஜினியை சீண்ட வேண்டாம் என்று ஸ்டாலினே அறிக்கைவிட்டு மன்னிப்பு கேட்டதும் நடந்தது. ஆனால், இப்போது அப்படி எதுவும் இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் வருந்தினார்களாம்.

மன்ற அமைப்பு சரியாக இருந்தால், இந்த நிலை வந்திருக்குமா இன்று சீமானுக்கு எதிராக போராடியிருப்போம் என்று ரசிகர் மன்றத்தினர் கொந்தளித்தார்களாம். சீமானை அப்படியே விட்டுவிட்டால் தொடர்ந்து சீண்டுவார், அதனால் யார் மூலமாவது  கட்டுப்படுத்துவோம் என்று  தேர்வு செய்யப்பட்டவர்தான் லாரன்ஸ்.

ஏற்கெனவே லாரன்ஸ்க்கும் சீமானுக்கும் சின்ன பிரச்னை ஏற்பட்டு, அது முடிந்தும்போனது. அதனால் ரஜினி தரப்பில் பேசப்பட்டதும், தன்னுடைய ஊனமுற்ற குழந்தைகளைக் கேடயமாக வைத்து அறிக்கை வெளியிட்டார். உண்மையிலே அப்படி யாராவது பேசியிருக்கலாம் என்றுதான் சீமான் மன்னிப்பு கேட்டாராம்.

ரஜினிக்காகத்தான் லாரன்ஸ் பேசினார் என்ற தகவல் தெரியவந்ததும், உண்மையிலே தம்பிகள் பொங்குகிறார்களாம். அதனால் இப்போது லாரன்ஸ் போனில் கெட்ட கெட்ட வார்த்தைகளாக தம்பிகள் கக்குகிறார்களாம். கட்சி ஆரம்பிக்கும் வரை விட மாட்டோம் என்கிறார்கள் சீமானின் தம்பிகள். என்ன செய்யப்போகிறார் லாரன்ஸ்?