கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டாராம் லாரன்ஸ்! அடுத்து சீமானிடம் போவாரா?

தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் அசட்டுத்தனமாக கமல் போஸ்டரில் சாணி அடிப்பேன் என்று பேசி, கமல் ரசிகர்களிடம் கடுமையாக வாங்கிக் கட்டினார் லாரன்ஸ்.


அவர் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பேசியது மீண்டும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்த விஷயத்தில் ரஜினியும் தனக்கு ஆதரவாக இல்லை என்பதை தெரிந்துகொண்டதும் லாரன்ஸ், நேரடியாக கமல்ஹாசனை சந்தித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். அதனால் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டாராம்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று, இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை அவரது அலுவலகத்திற்கு நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். 

அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ராகவேந்திரா லாரன்ஸ் கூறியிருக்கிறார். அடுத்து எப்போ சீமானிடம் போய் மன்னிப்பு கேட்கப் போகிறார் என்று நாம் தமிழர் தம்பிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.