நண்பனை காதலியுடன் சேர்த்து வைத்த இளைஞன்! பிறகு நாடோடி பட பாணியில் நேர்ந்த கொடூரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நாடோடி திரைப்பட பாணியில் நண்பரின் காதலுக்கு உதவி செய்த சட்டக் கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


செங்கல்பட்டை அடுத்த மேலேறிப்பாக்கத்தைச்  சேர்ந்தவர் சூர்யா. சட்டக் கல்லுரி ஒன்றில் படித்து வருகிறார். படிப்பை மட்டும் கவனித்து வந்த வரை எல்லாம் சுமூகமாகத் தான் போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் நண்பன் கார்த்திக்கின் காதல்தான் சூர்யாவுக்கு எமனாக முடிந்தது. 

கார்த்திக் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், தங்கள் காதலைச் சேர்த்து வைக்கை நண்பன் சூர்யாவின் உதவியை நாடியுள்ளார். சூர்யாவும் வழக்கமான திரைப்பட கதாநாயகர்களைப் போல் எண்ணிக்கொண்டு நண்பனின் காதலுக்கு உதவி செய்ய அந்த ஜோடி இணைந்தது. 

ஆனால் அவர்கள் வாழக்கைதான் சூர்யாவின் வாழ்க்கை முடியக் காரணமானது. பெண்ணின் சகோதரன், தனது  சகோதரிக்கு காதல் திருமணம் செய்து வைத்த சூர்யாவின் மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது நண்பர்கள் மூலம் சூர்யாவின் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பெண்ணின் சகோதரன் சூரியாவை மதுவருந்த தனியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

அவர்களுடன் தனியே சென்ற சூர்யாவை அவர்கள் மதுவை ஊற்றிக் கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தப்பிச் சென்று தலைமறைவான பெண்ணின் சகோதர்ன் உள்ளிடோரி போலீசார் தேடி வருகின்றனர்.