மாட்டிக்கிட்டார் லாட்டரி மார்ட்டின்! தேர்தல் பணம் சப்ளையில் மாட்டிவிட்ட திமுக. பெரும்புள்ளி!

ஜூன் 3 கருணாநிதி பிறந்த நாளன்று ஆட்சி அமைத்தே தீருவோம் என்று ஸ்டாலின் முடிவு எடுத்திருப்பதாக தி.மு.க.வினர் தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், இதற்கு மேல் ஆட்சியை நீடிக்கவிட மாட்டோம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்திருக்கிறாராம்.


அதன் அடிப்படையில்தான், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையில் தி.மு.க. அணி இறங்கியது. அதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆளும் கட்சி, உடனடியாக தடுப்பு முயற்சியில் இறங்கியது.

அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள்.. ஏனென்றால், மார்ட்டின் மூலமாகத்தான் பணம் கொடுக்கப்பட இருந்ததாக தி.மு.க. முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்த விவகாரம் ஆதாரபூர்வமாகா சிக்கியிருக்கிறதாம். இந்த விவகாரத்தில் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மார்ட்டினை சுற்றிவளைத்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்போதும் பல்வேறு மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் ஆதரவுடன் லாட்டரி நடத்திவருகிறார்.. கோடிகளில் பணம் புரளும் மார்ட்டின். தமிழகத்தில் லாட்டரி தடை இருந்தாலும், தினமும் 10 கோடி ரூபாய்க்கு தமிழகம் முழுவதும் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

கோவையை தலைமையகமாக கொண்டு செயல்பட்ட மார்ட்டின், இங்கே லாட்டரி தடை செய்யப்பட்டதும் கொல்கத்தாவுக்கு மாறினார். ஏனென்றால், அங்கேயிருந்து வட கிழக்கு மாநிலங்களுக்கு லாட்டரி அனுப்புவது எளிது. அங்கே தடை இல்லை என்பதால் கொடி கட்டி பறந்து வருகிறார்.

ஏற்கெனவே ஜெயலலிதா காலத்தில் நில அபகரிப்பு வழக்கில் சிக்கினாலும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வெளியே வந்தார். இப்போது தேர்தல் விவகாரத்தில் பணம் கொடுத்த விவகாரத்தில் வசமாக சிக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே ஒரு தி.மு.க. புள்ளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே மார்ட்டின் மாட்டியிருக்கிறார்.

இன்று, கோவையில் 22 இடங்களில், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்கள், டெல்லியில் 3 இடங்கள் மற்றும் ஹைதராபாத், ஹுவாகத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி மற்றும் லூதியானா போன்ற இடங்களிலும்  சோதனை நடைபெற்று வருகிறது. இப்போது மார்ட்டினைவிட தி.மு.க.தான் அதிக பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.