லேன்சன் டொயோட்டா உரிமையாளர் ரீட்டா தற்கொலை! வீட்டில் தூக்கில் தொங்கினார்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் லேன்சன் டொயோட்டா கார் நிறுவனத்தின் பெண் இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் லேன்சன் டொயோட்டா கார் நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்தவர் ரீட்டா. இவர் நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் கணவர் லங்காலிங்காவுடன் வசித்து வந்தார். அவரது கணவரும் அதே நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பணி நிமித்தமாக விற்பனையகத்தில் உள்ள அனைத்து மேலாளர்களையும் ரீட்டா ஜானகி கண்டித்து உள்ளார். மேலாளர்களுடன் சண்டையிட்டது ஏன் என மேலாண்மை இயக்குநரான கணவர் கேட்க இதனால் கணவன் மனைவி இடையே அங்கேயே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பத் தகராறாக மாறியுள்ளது.

மேலதிகாரிகள் சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சக ஊழியர்கள் செய்வதறியாத தவித்தனர். விற்பனையகத்திலே மற்ற ஊழியர்கள் முன்னிலையில் மனைவி தன்னை திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபம் அடைந்த கணவர் லங்காலிங்கம் வீட்டிற்கு செல்லாமல் வெளியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த ரீத்தா ஜானகி வீட்டிற்கு சென்று தனது அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்து வந்த போலீசார் ரீத்தாவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ரீத்தா தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.