நடிகைகளுடன் உல்லாச வாழ்க்கை! சினிமா மீது தீராத மோகம்! லலிதா ஜுவல்லரி கொள்ளையனின் அந்தரங்க வாழ்க்கை!

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான முருகன், கொள்ளையடித்த பணத்தில் சினிமா எடுப்பதும், நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.


லலிதா ஜூவல்லரியின் திருச்சி கிளையில் கடந்த 2ம் தேதி சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் களவு போனது. இதுகுறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் மணிகண்டன், சுரேஷ், முரளி உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் இவர்களை எல்லாரையும் வழிநடத்துவது முருகன் என்வர்தான் என்ற விஷயம் தெரியவந்ததை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை தீவிரமாக உள்ளது. இந்த கும்பல் தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது. 

திருட்டு கும்பலுக்கு தலைவனான பாஸ் முருகனுக்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது மோகம் இருந்துள்ளது. எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முருகன் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்த நிலையில் கொள்ளையடிக்கும் நகைகளை நாகையை சேர்ந்த தாஸ் என்பவரிடம் கொடுத்து பணமாக மாற்றி கொள்வது வழக்கம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள வங்கிகளில் கொள்ளை சம்பவத்திற்கும் முருகனுக்கும் தொடர்பு இருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இப்படி கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்துள்ளார் முருகன். மேலும் நடிகைகளுக்கு பணத்தை வாரி வழங்கி உல்லாசமாகவும் இருந்துள்ளார் முருகன். மேலும் வெளிமாநில போலீசார் வந்தால் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உள்ளூர் போலீசாருக்கு பணம் கொடுத்து அவர்கள் உதவியும் முருகனுக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து உல்லாசமாக இருந்ததால் தீராத வியாதி முருகனுக்கு தொற்றி உள்ளதாகவும், அவனது உடல்நிலையை கருதி ஏற்கனவே ஆந்திர போலீசார் விடுவித்து உள்ளதும் தெரியவந்துள்ளது.

நடிகைகளுடன் முருகன் உல்லாசமாக இருந்ததாக தகவல் வெளியான நிலையில் "நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. முருகனுடன் நாங்கள் யாரும் அப்படி உல்லாசமாக இருக்கவில்லை" என நடிகைகள் தரப்பில் இதுவரை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.