திருவாரூரின் ரெண்டு பொண்டாட்டிகாரர் எஸ்.பிக்கு எய்ட்ஸ் முருகன் கொடுத்த சொகுசு கார்! விசாரணையில் அம்பலம்..!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைது செய்யப்பட்டு இருக்கும் திருவாரூர் முருகன் பற்றி தினம் ஒரு திடுக் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.


கர்நாடகா போலீசாரின் முன்னிலையில் இன்று முருகன் புதைத்து வைத்த நகைகளை தோண்டி எடுத்த அதே நேரத்தில் முருகனின் பல சாகசக் கதைகள் புதிது புதிதாகத் தோண்டி எடுக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகின்றன,அதில் ஒன்றுதான் திருவாரூர் எஸ்.பிக்கு முருகன் கார் வாங்கிக் கொடுத்த கதை.

திருச்சி தனிப்படை போலீசாரே முருகன் தனது சொந்த ஊரான திருவாரூர் போலீசாருடன் முருகன் எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளான்.ஒவ்வொரு முறையும் கொள்ளை அடித்துவிட்டு ஊருக்கு வரும்போதெல்லாம்,திருவாரூர் போலீசாருக்கு நகைகளையும் பணத்தையும் அள்ளி வழங்கி இருக்கிறான்.

சில வருடங்களுக்கு முன் திருவாரூர் எஸ்.பியாக இருந்த இரண்டு பெண்டாட்டிக்காரருடன் முருகனுக்கு மிகவும் நெருக்கமான பழக்கம் இருந்திருக்கிறார். அந்த எஸ்.பியின் மனைவிகள் இருவருக்கும் விதவிதமான டிசைனர் ஜுவல்லரிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறான் முருகன்.அது மட்டுமல்ல அந்த எஸ்.பிக்கு 18 லட்ச ரூபாய் விலையில் ஒரு சொகுசுக் காரை வாங்கிக் கொடுத்து இருக்கிறான்.

இப்படி எஸ்.பியின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்ததால் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் முருகன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மதுரை நகைக்கடை அதிபர் வீட்டில் 1500 பவுன் தங்கம்,சமயபுரம் டோல் கேட் -1 ல் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 4.5 கிலோ தங்கம்,மற்றும் லட்சக்கணக்கான பணம் போன்ற வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்போது லலிதா ஜுவல்லரி வழக்கில் முருகன் சிக்கியதால் இன்னும் பல பழைய கொள்ளை வழக்குகள் வெளிவர வாய்ப்பிருப்பதாக போலீசாரே பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.