ரூ.1 கோடியை அள்ளிய பள்ளிக்கூட ஆயா..! பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரே ஒரு கேள்வி!

அமராவதி: கோன் பனேகா குரோர்பதி 11வது சீசனில், ஆந்திராவைச் சேர்ந்த பெண் ரூ.1 கோடி பரிசு வென்றுள்ளார்.


அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி, என்ற நிகழ்ச்சி இந்திய அளவில்  மிகப் பிரபலமானதாகும். இதன் 11வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1 கோடி பரிசு வென்றுள்ளார்.

பபிதா டிரேட் என்ற அவர், ஆந்திராவின் அமராவதி நகரில் பள்ளிக்கூடம் ஒன்றில் சமையல் ஆயாவாகப் பணிபுரிகிறார். மாதம் ரூ.1500 சம்பாதிக்கும் அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி வரை அசத்தலான பதில் அளித்து, ரூ.1 கோடியை வென்று, அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளார்.  

ஏற்கனவே, கோன் பனேகா குரோர்பதி சீசன் 11ல் ஐஏஎஸ் தேர்வு எழுதும் பீகாரைச் சேர்ந்த சனோஜ் என்ற இளைஞர் ரூ.1 கோடி பரிசு வென்றிருந்தார். இதையடுத்து, இந்த சீசனில் 2வதாக ரூ.1 கோடி பரிசு வெல்லும் குரோர்பதி பபிதா டிரேட் ஆவார். எளிய மக்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தக்கூடியதாக, அவரது வெற்றி அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல...