பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிக்கு பிறந்த குழந்தை! மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி!

பிரிட்டனில் பெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தை பெற்றவருக்கு தந்தை என்ற அங்கீகாரம் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.


ஃபிரெட்டி மெக்கன்னல் என்பவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். உடலின் வெளி உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றப்பட்டாலும், கர்ப்பபை அகற்றப்படவில்லை. 

இந்நிலையில் செயற்கை முறையில் கருவுற்ற ஃபெரட்டி கடந்த ஆண்டு குழந்தை பெற்றெடுத்தார். குழந்தையின் பிறப்பை பதிவு செய்ய சென்றபோது தன்னை தந்தை என பதிவிடுமாறு கேட்டார். அதற்கு பதிவாளர் குழந்தை பெற்றெடுப்பவர்களை தாய் எனதான் குறிப்பிட முடியும் என கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தை நாடினார் ஃபெரட்டி.

குழந்தையின் நலம் கருதியே தன்னை தந்தை என பதிவிடுமாறு ஃபெரட்டி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆனால் முந்தைய காலங்களில் திருநம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தாய் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதிவாளர் வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஃபெரட்டி கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஒருவேளை அவர் வழக்கில் வெற்றி பெற்றிருந்தால் பிரிட்டன் வரலாற்றிலேயே குழந்தை பெற்றெடுத்த முதல் தந்தை என்ற பெயர் ஃபெரட்டிக்கு கிடைத்து இருக்கும். அதே சமயத்தில் அவரது குழந்தையும் இங்கிலாந்து வரலாற்றில் தாய் என்ற நபர் இல்லாத குழந்தை என்ற பெயரை பெற்று இருக்கும்.

நம்மூரில் உடலில் எந்த பிரச்சனை இல்லாவிட்டாலும் பெண்களுக்கு குழந்தை பிறப்பது பெரும் பாடாக உள்ளது. அந்த நாட்டில் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களுக்கெல்லாம் குழந்தை பிறக்கிறது.