17 வயதில் கல்யாணம்! 18 வயதில் குழந்தை! மீண்டும் கர்ப்பம்! 19 வயதில் இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! ராணிப்பேட்டை பரபரப்பு!

வேலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த போலீசார் கணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் செல்வம்- தனலட்சுமி தம்பதி வசித்து வந்தனர். கட்டிடத் தொழிலாளியான செல்வம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனலட்சுமியை கரம்பிடித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பம் தரித்து 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் தனலட்சுமி.

தனலட்சுமிக்கும் கணவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல நேற்றும் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் அதிகாலை செல்வம் வேலைக்கு சென்று விட்டார்.  

பின்னர் பொழுது விடிந்தும் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் தனலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். வேதனையின் விரக்தியில் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கினார் தனலட்சுமி. அருகில் குழந்தை அழுது கொண்டு நின்று கொண்டு இருந்தது.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமி தற்கொலை குறித்து அவருடைய கணவர் செல்வத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனலட்சுமியின் அவசர முடிவில் கருவிலேயே சிதைந்து போனது இன்னொரு உயிர்.