ஆபாச படம் லீக்! பெண் தற்கொலை! ஆண் கொலை! பிறகு என்கவுண்டர்! அதிர வைக்கும் சம்பவம்!

முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை ஃபோனில் வைத்திருந்த காதலன்; கொலையில் முடிந்த பரிதாபம்


மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை ஃபோனில் வைத்திருந்த காதலனால் கொலை, என்கவுன்ட்டர் உள்ளிட்ட சோகங்கள் நிகழ்ந்துள்ளன.

முசாஃபர் நகரைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை விட்டுவிட்டு, திடீரென கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது முன்னாள் காதலன் சுபம் குமார், அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக, தெரியவந்தது. 

ஆனால், மேலும் விசாரித்தபோது, சுபம் குமார் தனது ஃபோனில் உள்ள புகைப்படங்களை அழிக்காமல், அனுஜ் பிரஜாபதி என்பவருக்கு ஃபோனை விற்றுவிட்டாராம். ஃபோனை வாங்கிய அனுஜ், இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகவும், தெரியவந்தது. இதன்பேரில் ஏற்பட்ட கருத்து மோதலில், சுபம் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அனுஜை அடித்துக் கொன்றுவிட்டார். 

இதன்பேரில், சுபம் குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது, அவர்கள் போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தி, அந்த கும்பலை கைது செய்தனர். சுபம்குமார் தலைமையில் இயங்கி வரும் அந்த கும்பல், ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வருபவர்கள் ஆவர். இப்படியாக, ஒரு பெண்ணின் தற்கொலையில் இருந்து, பல்வேறு திருப்பங்களை சந்தித்து, ஒரு வழக்கு முடிவுக்கு வந்த விசயம் உத்தரப் பிரதேச போலீஸ் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.