திருமணமாக 2 ஆண்டுகள்..! 10வது மாடியில் இருந்து குதித்த இளம் மனைவி! அதிர வைக்கும் காரணம்!

மும்பையில் வரதட்சினை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மாடியில் இருந்து பெண் ஒருவர் குதித்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிஷா என்பவர் 2 வருடங்களுக்கு முன்னர் மிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மும்பையில் வசித்து வந்தனர். திருமணம் ஆன நாள் முதலே நிஷாவை வரதட்சிணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கொடுமையை தாங்க முடியாத நிஷா கடந்த செவ்வாய் கிழமை 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது தந்தைக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் கணவர் மிதேஷ் குடும்பத்தினர் வரதட்சினை கூடுதலாக கேட்டு திருமணம் ஆன நாள் முதலே சித்ரவதை செய்து வந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் 2 கோடி ரூபாய் கேட்டு வாங்கித் தருமாறு ஒரு அறையில் வைத்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததால் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்து உள்ளதாக நிஷா தெரிவித்து உள்ளார்.

மேலும் தன்னுடைய மரணத்திற்கு கணவர் குடும்பமே காரணம் எனவும் நிஷா மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். நிஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது கணவர் மிதேஷ், மாமனார் லட்சுமி சந்த்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விஷயம் தெரிந்து தலைமறைவான நிஷாவின் மாமியார் நிதாபனை தேடி வருகின்றனர்.