தாய்மை அடைந்த பெண் ஊழியர்! பணி நீக்கம் செய்த பிரபல நிறுவனம்! அதிர வைக்கும் காரணம்!

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் தான் தாய்மை அடைந்ததைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறி இழப்பீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.


நெட்ஃப்ளிக்ஸில் நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவின் மேலாளராகப் பணியாற்றியவர் தானியா ஜாரக்.  கடந்த ஆண்டு நவம்பரில் தானியா, தான் தாய்மை அடைந்ததை அலுவலகத்தின் சக நண்பர்களிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர் அதிகாரியான பிரான்சிஸ்கோ ரமோஸ் என்பவர் உருவத் தோற்றத்தை வைத்து  விமர்சித்ததோடு எவ்வித அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்துவிட்டதாக் தானியா குற்றம்சாட்டியுள்ளார். 

தன் தோற்றத்தையும் தனக்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்களையும் தனது நீதிமன்ற மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார் . வழங்கப்படாத ஊதியம், போனஸ், மன வேதனை, உளைச்சல் என அனைத்துக்கும் இழப்பீடு கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தானியா ஜாரா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதனிடையே, தானியாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் எப்போதும் அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மீது அக்கறைக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.