நான் பின்னாடி வர்றேன்..! விறகு வெட்டச் சென்ற திருமாண பெண்ணை சிதைத்த கொடூரர்கள்! செங்கல்பட்டு பயங்கரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் காவித்தண்டலம் பகுதியில் ஜெயபால் – கோமதி தம்பதி வசித்து வந்தனர். ஜெயபால் தனியார் பள்ளியில் பேருந்து உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அன்று விறகுகளை வெட்டி எடுத்து வருவதற்காக கோமதி உள்பட 4 பெண்கள் அருகில் உள்ள காப்பு காட்டிற்கு சென்றுள்ளனர். மற்ற பெண்கள் போதிய விறகு கிடைத்தவுடன் வீட்டிற்கு புறப்பட்டு விட கோமதி மட்டும் விறகுகளை வெட்டிக் கொண்டு இருந்துள்ளார். வெகு நேரமாகியும் கோமதி வீட்டிற்கு வரவில்லை.

இதனால் கிராமத்தில் உள்ள பெண்கள் காட்டுக் காப்பிற்கு சென்று கோமதியை தேடி உள்ளனர். அங்கே கோமதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

கோமதியின் ஆடைகளும் கிழிந்த நிலையில் இருந்தன. பின்னர் சாலவாக்கம் காவல் நிலைய போலிசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் கோமதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.