கோமலாவை பெண்கள் கழிவறைக்குள் வைத்து பூட்டிய விமலா..! ஹாஸ்பிடலில் அரங்கேறிய திடுக் சம்பவம்! அதிர்ச்சி காரணம்!

டெல்லியில் பெண் காவலரை கழிவறையில் தள்ளிபூட்டிவிட்டு பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் விமலா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 4 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அவரை பெண் காவலர் கோமலா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு விமலா இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு செல்லவேண்டும் என கூற, பெண் காவலர் கோமலா துணையுடன் கழிவறைக்கு சென்றார். கழிவறை வாசலில் 2 மர்மநபர்கள் விமலாவை காப்பாற்றி கூட்டிச் செல்ல தயாராக இருந்துள்ளனர்.

இதை பார்த்து விட்ட பெண் காவலர் கோமலா அவர்களிடம் விமலா சென்றுவிடாமல் இருக்க உடனே பின்னோக்கி நகர்ந்தார். ஆனால் அதற்குள் விமலாவும், அந்த மர்மநபர்களும் சேர்ந்து பெண் காவலர் கோமலாவை கழிவறைக்குள் தள்ளி பூட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பெண் காவலரின் செல்போனையும் விமலா பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டதால் அவரால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.

நீண்ட நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த பெண் ஒருவர் கோமலாவின் அலறல் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தார். பின்னர் கோமலா மீட்கப்பட்டார். பெண் காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய விமலா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.