பெண் போலீசுடன் எசகு பிசகு! எக்குத்தப்பான கோலத்தில் கேமராவில் சிக்கிய தொழிலதிபர்! பணம் கேட்டு மிரட்டும் அம்மணி! சீக்ரெட் ரிப்போர்ட்!

கோவையில் பெண் போலீசுடன் அப்படி இப்படி இருந்த டிராவல்ஸ் அதிபர் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்தப் பெண் தன்னை மிரட்டுவதாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சதீஷ் குமார். டிராவல்ஸ் அதிபரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் இவர் பெண் காவலரான கவிதா என்பவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தது  தொடர்பான சிசிடிவி காட்சிகள் அம்பலத்துக்கு வந்தன.கவிதாவும் கணவனைப் பிரிந்து வாழ்பவர் என்று கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்த போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். இதையடுத்து கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது அலுவலகத்தில் வேலை பார்த்த மைதிலி என்ற பெண்ணின் மூலம் கவிதாவின் தொடர்பு தனக்கு கிடைத்ததாகவும் அதனைத் தொடர்ந்து கவிதாவுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து கவிதாவும் மைதிலியும் தன்னை மிரட்டி வருவதாகவும், இதுவரை தன்னை மிரட்டி மூன்று லட்சம் ரூபாய் பணம் பறித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுபோன்று இன்னும் மூன்று வீடியோக்கள் இருப்பதாக கூறி அவர்கள்  மேலும் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் கூறியுள்ளார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

Photo Courtesy: நக்கீரன்