இடுப்பை தாண்டி வளர்ந்திருந்த கூந்தல்! திடீரென மொட்டை போட்டு பெண் போலீஸ் செய்த நெகிழ்ச்சி செயல்! உருக வைக்கும் காரணம்!

திரிசூர்: புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை பெண் போலீஸ் ஒருவர் தானமாக அளித்துள்ளார்.


பெண்கள் பலரும் தலைமுடியை அழகிற்காக வளர்க்கும் சூழலில், கேரளாவைச் சேர்ந்த சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் (46 வயது) தனது தலைமுடியை ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்த தீர்மானித்தார். ஆம், இதன்படி, தலையில் முடியின்றி பரிதவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில், அபர்ணா தனது தலைமுடியை முழுக்க மழித்துக் கொண்டுள்ளார்.

கால் வரை நீளமாக இருந்த அவரது தலைமுடியை தானமாக அளிப்பதன் மூலமாக, புற்றுநோயாளிகளுக்கு பலன் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கீமோதெரபி சிகிச்சைக்குப் பின் தலைமுடி இழந்து வாழ நேரிடும் புற்றுநோயாளிகளை பார்த்து இந்த உதவி செய்ய தீர்மானித்ததாக, அபர்ணா தெரிவிக்கிறார்.

திரிசூரில் உள்ள இரிஞ்சலகுடா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அவருக்கு, தற்போது பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.