ஓடும் ரயிலில் வட மாநில பெண் போலீசிடம் செக்ஸ் சில்மிசம்! திமுக பிரமுகரின் லீலைகள்!

ஓடும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீசிடம் சில்லுண்டித் தனம் செய்த தி.மு.க. செயற்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை மாவட்டம், இருகூரைச் சேர்ந்தவர் சந்திரன். தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினரான இவர், இருகூர் பேரூராட்சித் தலைவராகவும் இருந்தவர் ரயிலில் பயணம் செய்த இவரின் நொடி நேர சபலம் இவரது கவுரவத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. 

கடந்த 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க நேர்காணலுக்குச் சென்ற சந்திரன்  ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரயிலில் உடன் பயணித்த வட மாநிலப் பெண்ணின் வனப்பு சந்திரன் உள்ளிட்ட 5 பேரின் இச்சையைத் தூண்ட அவர்கள் அந்தப் பெண்ணிடம் கசமுசாவின் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

அப்போது அவர்கள் எதிர்பார்க்கவில்லை அந்தப் பெண் ஆபத்துக்கால சங்கிலியை இழுத்து  ரயிலை நிறுத்துவார் என்று. அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் சந்திரனை கைது செய்ததோடு தப்பியோடி தலைமறைவான மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, சந்திரன் உள்ளிட்டோர்  அத்துமீறியது வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் என்று கூறப்படும் நிலையில் அதனை ரயில்வே போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. எடப்பாடி அரசுக்கு எதிராகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாகவும் சந்திரன் வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில் வீண் பழி சுமத்தும் வகையில் சந்திரனுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு வீண்பழி சுமத்துவதாக தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.