ஒன் பாத்ரூம் கூட போக முடியல..! கழிவறையில் வச்சி மூடிடுறானுங்க..! கதறும் இளம் ஆசிரியை! அதிர்ச்சி காரணம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் கழிவறையிலும், வகுப்பறையிலும் மாணவர்களை தன்னை தாக்கியதாக பெண் ஆசிரியர் ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். மாணவர்களால் ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவ வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.


உத்தர பிரதேசத்தில் காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் பெண் ஆசிரியை மம்தா துபே. இவர் சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கு எதிராக ஆசிரம நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும், வகுப்பறையில் உள்ள மாணவர்களே தன்மீது நாற்காலிகளை வீசி கொடுமைப்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கழிவறைக்கு செல்லும்போது வெளியே கதவை பூட்டி வைத்து அநாகரீகமாக நடப்பதாகவும், பலமுறை மாணவர்களால் தான் தாக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவர்களால் ஆசிரியை தாக்கப்படும் விடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் மாணவர் ஒருவர் ஆசிரியையின் கைப்பையை தூக்கி எறிகிறார். பின்னர் அதை ஆசிரியை எடுக்கிறார். பின்னர் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் நாற்காலியை எடுத்து வந்து ஆசிரியை மீது அடிக்கிறார். இதனால் ஆசிரியர் அலறி அடித்து ஓடுகிறார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காந்தி சேவை நிகேதன் ஆசிரம நிர்வாகம் மாணவர்களிடம் ஆசிரியை நடந்து கொள்ளும் விதம் சரி இல்லை என்றும் அவர்களை அநாதைகள் என மனவேதனை படும் வகையில் பேசியதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.