ஒரு பெண் என்றும் பார்க்காமல்..! ஆசிரியை துப்பட்டாவை பிடித்து மாணவர்கள் அரங்கேற்றிய விபரீதம்! வகுப்பறை பரிதாபம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமம் ஒன்றில் குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரி ஒருவர் மாணவன் ஒருவனை தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரலி மாவட்டத்தில் சக் தவுரஹ்ராவில் காந்தி சேவா என்ற ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த நிலையில், அங்கு பயிலும் மாணவர்களை காண சிலர், குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரி மம்தா துபே சென்று உள்ளார். 

இதற்கிடையே, பெண் அதிகாரியுடன் ஆசிரமத்தில் உள்ள மாணவன் ஒருவன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, பின்னர் அவரது கைப்பையை தூக்கி எறிந்துள்ளான்.

கோபம் அடைந்த அந்த பெண் அதிகாரி , மாணவர்களின் ஒருவன் நாற்காலியை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து, தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரி மம்தா துபே, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் ஆசிரமத்தின் மேலாளர் தன்னை தாக்க மாணவர்களை தூண்டிவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் அதிகாரி மம்தா துபேவை தாக்க ஆசிரம ஊழியர் ஏன் மாணவர்களை தூண்டிவிட வேண்டும் என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.