பெரும் பணக்காரர்களின் ஆசை நாயகி! சினிமாகாரர்களும் வந்து செல்வார்கள்! பிங்கி மரணத்தில் விலகிய மர்மம்!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கணவனை விட்டு சென்னைக்கு வந்த மேற்கு வங்க பெண் தவறான தொடர்புகள் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார்.


சென்னை அண்ணாநகரில் ஆடம்பர பங்களாவில் வசித்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான பிங்கி குளியலறையில் ரத்தம் சொட்டச் சொட்ட இறந்து கிடந்தார். இது தொடர்பான தகவல்க்ளின் பேரில் அங்கு வந்த போலீசார் பங்களாவில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது விகாஸ் என்ற நபர் அங்கு வந்து சென்றது தெரிய வந்தத். அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவன் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் அப்போது பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் தெரிய வந்தன.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கணவனைப் பிரிந்து சென்னைக்கு வந்த பிங்கி, சென்னை அண்ணாநகரில் ஆடம்பர பங்களாவில் தங்கி கொண்டு திரையுலகினர் முக்கிய புள்ளிகள் உள்ளிட்டோருக்கு டாட்டூ வரையும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் பணம் சம்பாதிப்பதற்காக பிங்கி வாடிக்கையாளர்களின் விருப்பம் போலும் நடந்து கொள்வாராம்

இந்நிலையில் விகாசுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பிங்கி வீட்டுக்கு விகாஸ் வந்த நிலையில் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் விகாஸ் பிங்கியை வாஷ் பேசினில் பிடித்து தள்ளியதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிங்கி விகாசை போலீசில் காட்டிக் கொடுத்து விடுவேன் என மிரட்டியதும் அதனால் ஆத்திரமடைந்த விகாஸ் பின் கையை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து விகாசை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்