அந்த உறவுக்கு மறுத்த பக்கத்து வீட்டு பெண்! ஆத்திரத்தில் குழந்தை முன்பு காமுகன் அரங்கேற்றிய கொடூரம்!

மும்பையில் பாலியல் உறவுக்கு மறுத்த பக்கத்து வீட்டுப் பெண்ணை, அந்தப் பெண்ணின் குழந்தையின் கண் முன் குத்திக் கொன்று, சுத்தியலால் தலையில் தாக்கியவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியைச் சேர்ந்தவர் சிந்தாவதி. இவருக்கு திருமாணமாகி 6 மாதக் குழந்தை உள்ளது. கடந்த புதன் கிழமை இவரது கணவர் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பிய போது, சிந்தாவதி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் தலையில் பலத்த  காயங்களுடனும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது தொடர்பான புகாரின் பேரில் தடயஙள் உள்ளிட்டவற்றைக் கொண்டு போலீசார் விசாரணையும் புலனாய்வும் மேற்கொண்ட போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நிகில் என்ற 20 வயது நபர் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவன், பின்னர் அதிர்ச்சியளிக்கும் வகையிலான உண்மைகளை ஒப்புக்கொண்டான்.

சிந்தாவதியின் கணவர் வேலைக்குச் சென்ற பின் அவர்களது வீட்டுக்குள் நுழைந்த நிகில் அந்தப் பெண்ணை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதை அவன் ஒப்புக்கொண்டான். இதையடுத்து சிந்தாவதி கூக்குரலிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததை  அடுத்து பதற்றமும் ஆத்திரமும் அடைந்து சிந்தாவதியை சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பியோடியதாக அவன் தெரிவித்தான். இதில் சிந்தாவதி உயிரிழந்தார். 

இந்நிலையில் வீட்டுக்குத் திரும்பிய நிகில் ஒருவேளை சிந்தாவதி உயிருடன் இருந்தால். தனது நிலை மோசமாகிவிடும் என்று கருதி தனது வீட்டில் இருந்து ஒரு சுத்தியலை எடுத்து வந்து இறந்துகிடந்த சிந்தாவதியின் தலையில் தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நிகிலை போலீசார் கைது செய்துள்ளனர்