உதவி செய்தவனை நம்பி காரில் ஏறிய இளம் பெண்! கை கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

பிரேசில் நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை மர்மமான முறையில் கடத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


பிரேசில் நாட்டைச் சேர்ந்த மரியானா பஸ்ஸா தனது காரில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது உடற்ப்பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்த மரியானா பஸ்ஸா தனது காரில் பழுது ஏற்பட்டால் அருகில் இருந்தவரிடம் உதவி கேட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உதவிய நபர் அப்பெண்ணை மர்மமான முறையில் கடைசி காரில் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் தனது மகள் வீட்டுக்கு வராததால் காவல்துறையில் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடத்தப்பட இடத்திலிருந்து சுமார் 40 மணி அளவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதையடுத்து குற்றவாளி யாரென தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினருக்கு அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி ஒன்று கிடைத்தது அதில் அப்பெண்ணின் காரை சரி செய்த நபர் காரில் கடத்திச் சென்றுள்ளதாக உறுதிசெய்தனர். பின்னர் அவரது புகைப்படத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் அந்த நபரை கண்டு பிடித்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த நபர் மீது பல்வேறு கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் கைது செய்தனர்.

12 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஜாமினில் வெளிவந்த தான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் வந்த காரை சோதனையிட்ட போலீசார் அந்த கார் அருகில் உள்ள கரும்பு காட்டுக்குள் சென்று வந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முடிவு செய்ய முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.