வேலைக்காரியுடன் பிரபல டாக்டர் நெருக்கம்! போலீசாரிடம் சிக்கிய பரபர வீடியோ!

சென்னை திருவான்மியூரில் ஆன்லைன் மூலம் மருத்துவர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்த பெண் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.


டாக்டரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியூர் சென்றதையடுத்து ஆன்லைன் மூலம் தேவி என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். இந்நிலையில் வேலை செய்த காலத்தில் டாக்டரிடம் நெருக்கமாக நடந்துகொண்ட அந்தப் பெண் அதனை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

முதலில் பணம் கொடுத்த டாக்டர் அந்தப் பெண்ணின் நச்சரிப்பு தொடர்ந்ததை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்த வீடியோவை கைப்பற்றினர். 

விசாரணையில் அந்தப் பெண் இதேபோன்று ஆன்லைனில் பலரிடம் வேலைக்குச் சென்று நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரிய வந்ததுள்ளது. அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் டாக்டரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.