சொந்தக் கணவரை வங்கியில் டெபாசிட் செய்த மனைவி..! ஐ.ஓ.பி. ருசிகரம்

வங்கிக் கணக்கில் ஒரு பெண் பணம் செலுத்தும்போது கணவரையும் சேர்த்து டெபாசிட் செய்ய முயன்ற ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.


குடும்பத் தலைவி ஒருவர் வங்கியில் செலுத்துவதற்கான செலானை எடுத்து பூர்த்தி செய்துள்ளார். அதில் பெயர், பணம் விவரம், கணக்கு எண் ஆகியவற்றை தெளிவாக எழுதியுள்ள அந்தப் பெண் எவ்வளவுத் தொகை என்பதை எழுத்தால் எழுதும்போது சிரிப்பு வரும் வகையில் எழுதியுள்ளார்.

அதாவது ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணம் செலுத்திய அவர் ஆங்கிலத்தில் எழுத்தால் எழுதும்போது One Husband and Five Hundred only என எழுதியுள்ளார். Hundred என எழுதுவதற்கு ஏதோ ஞாபகத்தில் தவறாக எழுதிவிட்டார். இந்த சலான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பணம், நகையை தொலைந்து போகக்கூடாது என டெபாசிட் செய்வதுபோல, கணவரையும் யாரும் அபகரித்துவிடக்கூடாது என்பதற்காக வங்கியில் டெபாசிட் செய்யக் கூட வந்திருக்கலாம் என சிலர் நகைச்சுவையாக விமர்சித்தனர். இதில் இன்னொரு விஷயம் அதை வங்கியில் படித்து பார்க்காமல் வாங்கி பணத்தை போட்டுக்கொண்டது வேறுவிஷயம்.