நான் வெளிநாட்ல இருக்கேன்! குழந்தை எனக்கு பிறக்கல! கைவிரித்த கணவன்! அதிர்ச்சியில் மனைவி! தென்காசி பரபரப்பு!

திருமணம் ஆன உடனே வெளிநாட்டிற்கு சென்ற கணவன் தற்போது சந்தேகப்படுவதாக கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரை கரம்பிடித்தார் தேன்மொழி என்பவர். திருமணம் செய்து கொள்வதற்காகவே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அந்த நபர் தேன்மொழியை திருமணம் செய்து கொண்டு 60 நாட்கள் வாழ்ந்துள்ளார்.

மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பார்கள். ஆனால் மோகம் 30, ஆசை 60 போதும் என கருதிய அந்த நபர் விடுமுறை முடிந்துவிட்டதாக முதலாளி அழைக்க புதுமணப்பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு விமானத்தில் பறந்து சென்றார். இதையடுத்து தேன்மொழி கர்ப்பம் தரித்து 10 மாதததில் அழகான குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

இதையடுத்து குழந்தை பிறந்த சேதி கேட்டு சொந்த ஊர் வந்த கணவன் பிரச்சனையை ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணம் ஆன 2 மாதத்திலேயே வெளிநாடு வந்துவிட்டோம். பின்னர் எப்படி குழந்தை உருவானது என வழக்கம்போல் சினிமாவில் வரும் வில்லன்போல் கணவர் சந்தேகப்படு வீடு இரண்டானது.

தேன்மொழிக்கு பிறந்த குழந்தை தன்னுடையது இல்லை என கணவன் கூறியதால் தேன்மொழி ஆத்திரம் அடைந்த அந்த கைக்குழந்தையுடன் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தான் கர்ப்பம் தரித்துள்ளதாக அப்போது சந்தோஷம் அடைந்த கணவன் தற்போது ஏன் சந்தேகப்படுகிறார் என தெரியவில்லை என தேன்மொழி வேதனையுடன் தெரிவித்துள்ளார். 2 மாதம் மட்டும் வாழ்ந்துவிட்டு வெளிநாடு பறந்து செல்வதற்கு திருமணம் எதற்கு என்பதே பலரின் கேள்வி.