பிரபல நடிகர் முன் மண்டியிட்டு முத்தம் கொடுத்த இளம் பெண்! பொது இடத்தில் நிகழ்ந்த அநாகரீகம்!

நடிகர் வருண் தவானுக்கு விமானம் நிலையத்தில் ஏராளமானோருக்கு மத்தியில் ஒரு பெண் மண்டியிட்டும் பூங்கொத்து கொடுத்து காதலைத் தெரிவித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


வழக்கமாக அழகான பெண்களிடம் ஆண்கள் ஒற்றைக் காலில் மண்டியிட்டு காதலைத் தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் வருண் தவானிடம் ஒரு பெண் இந்த வகையில் தனது காதலைத் தெரிவித்தார். பத்ரிநாத் கீ துல்ஹனியா, ஹம்ப்டி ஷர்மா கீ துல்ஹனியா, பத்லாபூர் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்த வருண் தவான் தன் நடிப்புத் திறமையால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் லண்டன் சென்றுவிட்டுத் திரும்பிய வருண் தவானுக்கு விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கம் போல ஆட்டோகிராஃப் கேட்ட ரசிகர்கள், செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு ரசிகையின் செய்கை எதிர்பாராத வகையில் இருந்தது. 

நடிகர் வருண் தவானிடம் பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகை சட்டென ஒற்றைக்காலில் மண்டியிட்டு அமர்ந்து வருண் தவானிடம் தனது காதலைத் தெரிவித்ததோடு அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த ரசிகையை அணைத்துக்கொண்டு வருண் தவானும் அன்பை வெளிப்படுத்தினார். இந்தப் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.