ஒரே நேரத்தில் 3 விதி மீறல்! வளைத்து பிடித்த போலீஸ்! ஆனாலும் ஃபைன் கட்டாமல் தப்பிய இளம் பெண்!

சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய பெண் போலீசார் விதிக்கும் அபராதத்தில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்வேன் மிரட்டி தப்பித்த ருசிகர சம்பவ நடந்துள்ளது.


டெல்லியில் போக்குவரத்து போலிசார் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களை மடக்கி அபராதம் விதித்து வந்தனர். அப்போது அந்த வழியே விதிகளை மீறி வாகனம் ஓட்டிய பெண்ணை போலீசார் மடக்கினர்.  

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் சரியாக அணியாமல் இருந்தது, உடைந்த நம்பர் பிளேட்டை பொருத்தியிருந்தது என விதிமுறை மீறல்களை மீறியிருந்தார் அந்தப் பெண். மேலும் வாகனத்திற்கான எந்த ஆவணத்தையும் அவர் கொண்டு வரவில்லை.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்ஸை சமர்ப்பிக்காததற்காக ரூ.5,000 ஆர்சி புக் இல்லாததற்காக ரூ.5,000, மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத காரணத்திற்காக ரூ.3,000, ஹெல்மெட் விதிமீறலுக்காக ரூ.1,000, காற்று மாசுபாடு தரநிலை விதிமீறலுக்காக ரூ.10 ஆயிரம் ரூபாய் என பல மடங்கு அபராதம் விதிப்பதாக போலீஸ் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். மேலும் ஹெல்மெட்டால் தாக்கி விடுவேன் என போலீசாரை அச்சுறுத்தினார். ஆனால் அந்த பயத்திற்கு போலீஸ் செவிசாய்க்க வில்லை.

போக்குவரத்து விதிகளை மீறியதால், அபராதம் செலுத்தியே ஆகவேண்டும் என போலீசார் கூற வேறு வழியின்றி திடீரென தற்கொலை மிரட்டல் விடுத்தார் அந்த பெண். அபராத ரசீது வழங்குவதாக இருந்தால், தற்கொலை செய்து கொள்வேன் என அவர் மிரட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

போலீசாரின் பயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு தப்பித்து விட்டார். ஆனால் இதேபோல் எல்லா சமயங்களிலும் அந்த பெண் தப்பிக்க முடியாத என போலீஸ் தெரிவித்தனர்.