பெண் நோயாளிகளை நிர்வாணமாக வீடியோ! விபரீத பெண் டாக்டரின் வினோத ஆசை!

மும்பையில் கிளினிக்கில் ரகசிய கேமிரா பொருத்தி, சிகிச்சைக்கு வரும் பெண்களை புகைப்படம் எடுத்து வந்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.


மும்பை அந்தேரி பகுதியில் உள்ள லோகாண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியில் சரும அழகூட்டுதல், உடல் எடை குறைப்பு உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்கும் கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. டாக்டர் சிம்பிள் ஆஹர்ஸ் கிளினிக் என பெயரிடப்பட்டுள்ள இங்கு, இளம்பெண் ஒருவர் சமீபத்தில் சிகிச்சை பெற சென்றிருக்கிறார். 

சரும அழகு சிகிச்சைக்காக சென்ற அந்த பெண்ணை, உள் அறைக்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக படுக்க வைத்துள்ளனர்.  அப்போது, அவர் மேலே பார்த்தபோது, ஒரு சிவப்பு ஒளி உமிழும் லென்ஸ் இருப்பதை கண்டுள்ளார். அது என்ன என்று அங்கிருந்தவர்களிடம் கேட்க, அவர்கள் அது புகை ஏற்பட்டால் கண்டுபிடிக்கும் எச்சரிக்கை சமிக்ஞை என்று கூறியுள்ளனர்.

ஆனாலும், அதனை நம்பாத அந்த பெண் உடனடியாக அதனை தனது ஃபோனில் படம் பிடித்துக் கொண்டு, சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார். உடனடியாக, அடுத்த சில நிமிடங்களில், அந்த கிளினிக்கை நடத்தும் டாக்டர், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த விசயம் வெளியில் தெரிந்தால் உன்னை தொலைத்துவிடுவேன், என மிரட்டியுள்ளார். இதனால், அந்த பெண்ணின் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

கிளினிக்கில் எதோ தவறு நடப்பதாக உறுதி செய்த அப்பெண், உடனடியாக, ஓஷிவாரா போலீசில் புகார் அளித்தார்.இதனை ஏற்று வழக்குப் பதிந்த போலீசார், குறிப்பிட்ட கிளினிக்கை சோதனையிட்டதில், அங்கு கேமிரா பதுக்கி வைக்கப்பட்டு, சிகிச்சைக்கு வரும் பெண்களை நிர்வாண புகைப்படம் எடுத்து வருவதாக, தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கிளினிக்கை நடத்திவரும் பெண் டாக்டரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஒரு பெண் டாக்டரே, இத்தகைய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.