சூட்கேஸில் இளம் பெண் டாக்டரின் சடலம்! காதலன் வெறிச் செயல்!

சூட்கேசில் பெண் டாக்டரின் சடலம் அடைத்துவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ப்ரீத்தி ரெட்டி. இவர், ஆஸ்திரேலியாவில் பல் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதியன்று, ப்ரீத்தியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலிய போலீசில்புகார் செய்தனர். 

இதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், சிட்னி அருகே ஒரு ஓட்டல் முன்பாக, ப்ரீத்தி அவரது காருக்குள்ளேயே சூட்கேஸ் ஒன்றில்ச சடலமாகஅடைத்துவைக்கப்பட்டு கிடந்ததை கண்டறிந்தனர். அந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்பின், அங்குள்ள சிசிடிவி கேமிராவை பரிசோதித்த போலீசார், அதில்,ப்ரீத்தியும், அவரது முன்னாள் காதலரும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, ப்ரீத்தியின் காதலனை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். ஆனால், அவர் இதுபற்றி எதுவும் தெரியாது என மறுத்துவிட்டார். அடுத்த நாளே, அந்த நபருக்கு கார் விபத்து ஒன்றில் தலையில் அடிபட்டுவிட்டு, சுயநினைவு போய்விட்டது. இதனால், உண்மை கொலையாளி யார் எனத் தெரியாமல் ஆஸ்திரேலிய போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.