பிரசவத்திற்கான நேரம் வந்தது! வலியால் துடித்தேன்! வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்! கதறிய பெண்! இதயத்தை உலுக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் சிறை ஒன்றில் பிரசவ வலியால் துடி துடித்து குழந்தை பெற்ற பெண்ணுக்கு சிறை நிர்வாகத்தினர் உள்பட யாரும் உதவி செய்யாமல் அலட்சியம் காட்டிய அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.


அமெரிக்காவின் கொலொரடோ மாகாணம் டென்வெர் நகரைச் சேர்ந்த டியானா சான்செஸ் என்ற பெண் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் திருட்டு வழக்கில் கைதாகி ஒரு வருட தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். 

சிறையில் அடைக்கப்பட்டிருந்த டியானாவுக்கு 2 மாதங்கள் கழித்து திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் துடி துடித்து கதறி அழத் தொடங்கினார். தான் பிரசவ வலியால் துடிப்பதாகவும் தனக்கு உதவுமாறும் அங்கிருந்த சிறை அதிகாரிகளிடம் டியானா கண்ணீருடன் கேட்டார்.

இதை அடுத்து அங்கு வந்த செவிலியர் டியானாவின் பனிக்குடம் உடைந்து விட்டது தெரிந்தும் உதவி செய்யாமல் சென்று விட்டனர். பின்னர் ஓரளவு கருணை உள்ளம் கொண்ட சிலர் பிரசவத்திற்காக துணிகள் மட்டும் கொடுத்துள்ளனர். அதை பயன்படுத்தி தனக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் டியானா.

மேலும் பிரசவத்தின் போது வேடிக்கை மட்டுமே பார்த்த சிறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்த விவரங்களை தற்போது சிறை தண்டனை முடித்து வெளியில் வந்த டியானா போலீசாரிடம் புகாராக கொடுத்துள்ளார். மேலும் பிரசவத்தின் போது எந்த உதவியும் செய்யாத சிறை நிர்வாகத்தின் மீதும், வேடிக்கை பார்த்த செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார் டியானா.

டியானா கொடுத்த புகாரில் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது பேட்டியளித்த டியானா கடந்த வருடம் நானும் என் மகனும் போராடி உயிர் பிழைத்துள்ளோம். அநேகமாக நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்.

தண்டனை காலத்தில் சிறையில் தான் அனுபவித்த கொடுமைகள் பற்றி புகார் அளித்த பின் தெரிவித்த விஷயங்களும், சிறையில் அவர் துடி துடித்த சிசிடிவி கேமரா காட்சிகளும் அனைவர் மனதை மட்டும் அல்ல கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக உருக்கமாக இருந்தது.