சிவப்பு நிற சுடிதார்..! எரிந்து கரிக்கட்டையான உடல்! அருகே செருப்பு, மண்ணெண்ணெய் கேன்! விராலிமலையை அதிர வைத்த பெண் கொலை!

புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கிருந்த மண்ணெண்ணெய் கேன் மற்றும் தடயங்களை கைப்பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கலிங்கி என்ற பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏழுமலை என்பவர்தான் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.  

தகவல் அறிந்து வந்த போலீசார் சுமார் 32 வயதுள்ள பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர். உடல் அருகே மண்ணெண்ணெய் கேன், செருப்பு, தோடு ஆகியவற்றை கைப்பற்றினர். சிவப்பு நிற சுடிதாரில் பாதி எரிந்திருந்தது. உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  

இதையடுத்து பூதகுடி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும், பாத்திமா நகர் பகுதி கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டது போல இந்த பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.