ஒழுங்காக மூடப்படாத பாதாள சாக்கடை குழி! பரிதாபமாக பலியான 2 குழந்தைகளின் தாய்! அதிகாரிகள் அலட்சியத்தால் விபரீதம்!

சிவகங்கை மாவட்டத்தில் சரியாக மூடாத பாதாள சாக்கடை குழியால் விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சண்முகம் இவரது மனைவி ரேவதி இருவரும் இருசக்கர வாகனத்தில் அரியக்குடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு செல்ல வந்துள்ளனர். ரயில்வே பீடர் சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது இவர்களுக்கு முன்னே சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியை கண்டு முன்னே சென்ற இருசக்கர வாகன ஓட்டி தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சண்முகம் தனது வாகனத்தையும் திடீரென நிறுத்தியுள்ளார். இதனால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இந்நிலையில் கீழே விழுந்த ரேவதியின் மீது அந்த வழியாக வந்த பள்ளிப்பேருந்து கடுமையாக மோதியது. இந்நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மற்றும் காயமடைந்த அவரது கணவர் சண்முகம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி வாகன ஓட்டுநர் கைது செய்துள்ளனர் மற்றும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.