கழுத்தில் பாம்பு சுற்றிய நிலையில் பெண் சடலம்! வீட்டுக்குள் மேலும் 140 பாம்புகள்! உள்ளே சென்ற போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் ஒரு பெண் வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததை அறிந்த காவல் துறையினர் சென்று பார்க்கும் போது, அந்த பெண் கழுத்தைச் சுற்றி இறுக்கிய பாம்புடன் இறந்து கிடந்துள்ளார். மேலும், அப்பெண் வீட்டில் 140 பாம்புகள் இருப்பதையும் கண்டுபிடிக்கப்பட்டது.


அமெரிக்காவில், இண்டியானா பகுதியில் 36 வயதான Laura Hurst என்ற பெண் தனிமையில் வாந்து வருகிறாள். இந்த நிலையில், Laura Hurst சுயநினைவின்றி இருந்தாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை அடுத்து, காவல் துறையினர் அந்த பெண் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது தான் அந்த அதிர்ச்சி அவர்களுக்கு காத்து கொண்டு இருந்தது, அது என்னவென்றால்? பெண்ணின் கழுத்தைச்சுற்றி 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.

பின்னர், காவல் துறையினர் விசாரணையில் அப்பெண்ணின் கழுத்தை பாம்பு இறுக்கியதால் , Laura Hurst உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். ஆனால் உடற்கூறு ஆய்வுக்கு முன் எதையும் உறுதியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.

பாம்புகளை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், Laura Hurst வீட்டில் 140 பாம்புகளும் இருந்தது கண்டு வியந்தனர். பின்னர் விசாரணையில் Laura தனக்கென்று சொந்தமாக 20 பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகின்றது.