கர்ப்பிணி வயிற்றுக்குள் டாக்டர்கள் வைத்த விவகாரமான பொருள்! குழந்தையை தவிக்க விட்டு பெண் பலி! பிரசவத்தின் போது பயங்கரம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசவித்த பெண், மருத்துவரின் தவறால் பெற்ற குழந்தையை விட்டு ஐந்தே நாட்களில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயது பெண் தனுஸ்ரீ. கருவுற்றிருந்த இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு பணியில் இருந்திருக்க வேண்டிய நபரான ரவீந்திர தவால் இல்லை. மருத்துவமனையில் விசாரித்தபோது அவர் தனியாக ஒரு மருத்துவமனை நடத்தி வருவதாகவும் அங்கு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனது தந்தையுடன் தனுஸ்ரீ அந்த மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த அந்த மருத்துவர் பெண்ணுக்கு நீர்ச்சத்து குறைந்து விட்டதாகவும் உடனே குழந்தையை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதற்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் அந்த நபர் தெரிவித்ததையடுத்து அதற்கு தனுஸ்ரீயின் தந்தையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அதன் பிறகு நேர்ந்தது தான் அவலம. தனுஸ்ரீ தொடர் வயிற்று வலியால் துடிக்கத் தொடங்கினார். அதற்கு சிகிச்சை என்ற பெயரில் ஏதோ அளிக்கப்பட்டாலும் அதனால் பலனின்றி ஐந்தே நாட்களில் அவர் உயிரிழந்தார்

பிரேத பரிசோதனையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தனுஸ்ரீ வயிற்றில் பருத்தியாலான துடைக்கும் துணியை வைத்து தைத்துவிட்டது தெரிய வந்தது. இது தொடர்பான தனுஷின் தந்தையின் புகாரின் பேரில் போலீசார் மருத்துவர் ரவீந்திர தவால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவர் ரவீந்திர தவாலை பணிநீக்கம் செய்து அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது