நள்ளிரவு! அரசுப் பேருந்து! கண் அயர்ந்த பெண் பயணி! கண்டக்டரின் கை செய்த விபரீதம்! அலறிய விபரீதம்!

அரசுப் பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தை நாடி உள்ளார்.


சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி செவ்வாய்க் கிழமை இரவு அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கோயம்பேட்டில் இருந்து மன்னார்குடி வழியே கும்பகோணம் செல்லும் அந்த அரசு விரைவு பேருந்தில் பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் உள்பட ஏராளமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். 

இரவு நேரம் என்பதால் அனைத்து பயணிகளுமே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நடத்துநர் இருக்கை அருகே உள்ள இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு நடத்துநர் ராஜூ பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தவறாக நடக்க முயன்ற நடத்துநரின் கன்னத்தில் அறைந்ததுடன் எச்சரித்தும் உள்ளார். 

ஆனால் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நான் கவலைப்பட மாட்டேன் என ராஜூ தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக பணி இடை நீக்கம் செய்யப்பட்ட நடத்துநர் ராஜூ தற்போது பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் யாரையும் தெரியாத பயணிகள் நடத்துநர், ஓட்டுநரைத்தான் பாதுகாவலனாக நம்பி பயணம் செய்கின்றனர். 

ஆனால் இதுபோல் சிலர் செய்யும் தவறுகளால் இரவு நேரங்களில் பெண்கள் பயணம் செய்வதற்கும் அல்லது தூங்குவதற்கும் அச்சம்ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.