காதலிக்கும் போதே கர்ப்பபம்! 7 மாத கர்ப்பிணியாக காவல் நிலையம் வந்த இளம் பெண்! அதிர்ச்சி காரணம்!

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே காதலித்து கர்ப்பமாக்கி விட்டு காதலன் தலைமறைவானதால் அவரது வீட்டின் முன்பு காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அடுத்து ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் இவருக்கும் சாத்தூர் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த அனிதா என்பவரும் முதலில் தொலைபேசி மூலமாக அறிமுகமாகியுள்ளனர். இதையடுத்து ஆனந்தராஜ் ஒருநாள் அனிதாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது வேறு யாருக்கோ போன் செய்வதற்கு பதிலாக உங்களுக்கு போன் செய்து விட்டதாகவும் தவறான அழைப்பு என தெரிவித்து தொடர்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து தினமும் அனிதாவிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஆனந்தராஜ். இதையடுத்து இருவருக்கும் இடையே ஒரு நட்பு மலர்ந்தது ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர். முதல் சந்திப்பிலேயே அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்து வந்துள்ளனர். இதையடுத்து அனிதாவுடன் ஆனந்தராஜ் உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து கர்ப்பமான அனிதா ஆனந்தராஜன் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஆனந்தராஜ் கூறிய நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து அதில் வசித்து வந்துள்ளனர்.

அனிதா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் ஆனந்தராஜ் வீட்டிற்கு வருவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது .இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அனிதா உடனே ஆனந்தராஜன் வீட்டின் முன்பு ஆனந்தராஜ் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஒரு வாரத்திற்குள் ஆனந்தராஜை கண்டுபிடித்து அவரை அனிதாவுடன் சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து அப்பெண் தனது போராட்டத்தை விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.