பார்க்கக் கூடாத இடத்தை படம் பிடித்துவிட்டார்! ஹேர் ரிமூவர் டாக்டர் மீது இளம் பெண் பகீர் புகார்!

மும்பையில் ஹேர் ரிமூவல் சிகிச்சையின் போது மருத்துவர் படம் பிடித்துவிட்டதாக இளம் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மும்பை லோகந்த்வாலாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அந்த 27 வயதுப் பெண் கடந்த மாதம் 24-ஆம் தேதி சிகிச்சைக்காகச் சென்றார். இந்நிலையில் காவல்துறையில் அந்தப் பெண் அளித்த புகாரில்  அந்த மருத்துவரின்  3 பெண் உதவியாளர்கள் முன்னிலையில் சிகிச்சைக்காக ஆடைகளைக் களைந்ததாகத் தெரிவித்தார்.  

சிகிச்சையின் போது தனது தலைக்கு மேலே இருந்த புகை கண்டறியும் கருவிக்குள் காமிரா இருந்ததை கண்டு பிடித்ததாக கூறியுள்ள அவர், உடனடியாக தனது சிகிச்சையை நிறுத்த வற்புறுத்தி ஆடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவருடன் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது 15 நாட்களில் பதிவுகள் அழிந்துவிடும் என மருத்துவர் வெகு சாதாரணமாகக் கூறியதாக அவர் கூறியுள்ளார். 

இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்நிலையில் மருத்துவரின் உதவியாளர்களான 3 பெண்களிடமும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிகிச்சை தொடங்கும் முன்பே அங்கு கேமரா இருந்தது அந்தப் பெண்ணுக்கு தெரியும் என கூறியுள்ளனர்.