வயதோ 34..! இன்னும் நான் விர்ஜின்..! வலை விரித்த பஞ்சாயத்து போர்டு தலைவியுடன் உல்லாசம்.! தொழில் அதிபரின் விபரீத அனுபவம்!

1985ல் பாக்யராஜின் இயக்கம், நடிப்பில் வெளியான சின்ன வீடு படத்தின் திரைக்கதையை போலவே நிஜமாகவே வாழ்ந்து வந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் பல தொழிலதிபர், போலீசார் என வசதி படைத்தவர்களிடம் கைவரிசை காட்டியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை, மும்பை , துபாய் உள்ளிட்ட இடங்களில் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் 2 குழந்தைகளையும் மாமியார் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.  

பாலச்சந்திரனின் சென்னை அலுவலகத்திற்கு வந்த மயூரா வர்ஷினி என்ற பெண் பெங்களூரில் இருந்து வருவதாகவும், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இதை அடுத்து அந்த பயிற்சி எடுக்க பாலச்சந்திரன் உதவி உள்ளார். பாலச்சந்தருக்கு மனைவி இல்லாததை தெரிந்துகொண்ட மயூரவர்ஷினி பாலசந்தரை மயக்கி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். மனைவி இல்லாததால், தன்னுடைய உடற்பசியை மயூராவிடம் தீர்த்துக்கொள்ள அவரும் இணங்கினார்.  

இதையடுத்து அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருக்க, பாலசந்தரிடம் நகை பணம் உள்ளிட்டவைகளை சுருட்டிக்கொண்டார் மயூரா. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது மயுராவின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டார் பாலச்சந்தர். பின்னர் மயுராவை கண்காணித்தபோது, அதில் அவரைப் பற்றிய உண்மைகள் தெரியவந்தது.

மயூராவின் உண்மையான பெயர் செந்தாமரை சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம். மயூராவுக்கு சதாசிவம் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். சொந்த ஊரில் திமுக பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர் செந்தாமரை என்பதும் தெரியவந்தது. இடையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற மயுரா, துபாய் ரிட்டர்ன் ராஜதுரை என்பவருடன் நெருங்கி பழகி பணம் நகைகளை அபகரித்து உள்ளார்.

பின்னர் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமாரை மயக்கி அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய்களை சுருட்டிக்கொண்டு தப்பி உள்ளார். இந்நிலையில் பாலச்சந்தர் பணம், நகைகளை திருப்பி கேட்டதற்கு, தன்னுடன் உல்லாசமாக இருந்ததற்கும் சரியாகி விட்டது என மயூரா சொல்லிவிட்டாராம். இதனால் பாலச்சந்தர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செந்தாமரை என்ற மயூரா மீது புகார் கொடுத்துள்ளார் .