இளம் பெண்ணிடம் அடி வாங்கிய இமான் அண்ணாச்சி! தீயாய் பரவும் வீடியோ உள்ளே!

இமான் அன்னாச்சி போல் ஒருவர் கிடைத்தால் அடித்து, உதைத்து மிதிப்பேன் என தொலைக்காட்சி ஒன்றில் பெண் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


முதலில் மக்கள் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆகி நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பிரபலமாகி பின்னர் சன் டிவியில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி பிரபலம் ஆனவர் இமான் அன்னாச்சி. இவர் கோ, காக்கிச்சட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் இவர் சொல்லுங்கன்னே சொல்லுங்க, குட்டி, சுட்டீஸ் போன்ற நிகழ்ச்சிகள் பிரபலம் அடைந்தன. 

குழந்தைகள் நிகழ்ச்சியில் குழந்தைகள் இவரை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்பவர் இமான் அன்னாச்சி. இவர் தன்னை பொதுவெளியில் நடிகராகவே காட்டிக் கொள்வதில்லை. மக்களோடு மக்களாக எளிமையாக பழகுபவர். இப்படிப்பட்ட எளிமையான மனிதரை பெண் ஒருவர் அடிப்பேன், உதைப்பேன் என கூறியுள்ளார்.

தற்போது கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி அறிமுகம் ஆகி உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பெண்கள் நேர்முகத்தேர்வுக்கு வந்துள்ளனர். அவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண்ணிடம் தன்னைப் போல் ஒரு டீச்சர் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என கேட்டார்.

அதற்கு அந்தப் பெண், இமான் அன்னாச்சி போல் டீச்சர் கிடைத்தால் அடிப்பேன், உதைப்பேன் என கூறினார். உடனே அரங்கத்தில் இருந்து பெண்கள் சிரித்தனர். உடனே இமான் அன்னாச்சியும் எங்கே அடி பார்ப்போம் என்றுகூற, அவர் உடனே பாசமாகத்தான் அடிப்பேன் என்று சொல்லி சமாளித்தார். பின்னர் பாசத்தில் அடிக்குமாறு இமான் அன்னாச்சி கூற அந்த பெண் லேசாக அடிக்க உடனே கையில் வலி எற்பட்டது போல் அவர் செய்த சுவாரஸ்ய சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.