திருநங்கையிடம் வம்பு! நடுரோட்டில் 2 குழந்தைகளின் தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்!

பிரிட்டனில் சமூக ஆர்வலராக உள்ள திருநங்கையை விமர்சித்த குற்றத்திற்காக அவரது குழந்தைகள் கண்முன்னே கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்டார்.


பிரிட்டனில் கேட் ஸ்காட்டோ என்ற பெண் ஒருவர் சமூக ஆர்வலரான ஸ்டெப்னி ஹைடன் என்ற திருநங்கை குறித்து சமுக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதாவது ஸ்டெப்னி ஹைடன் திருநங்கை அல்ல என்றும் அவர் ஒரு ஆண் என்றும் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்டெப்னி ஹைடன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் கேட் ஸ்காட்டோவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் சமூகலைவளத்தில ஸ்டெப்னி ஹைடன் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து கேட் ஸ்காட்டோவை போலீசார் கைது செய்தனர். அவரை 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கேட் வீட்டிற்கு 3 காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

வீட்டில் கேட் ஸ்காட்டோ வின் 1 வயது ஆட்டிசம் பாதித்த மகள் மற்றும் 20 மாதக் குழந்தை கண்முன்னே அவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர். பின்னர் அவரை தர தரவென சாலையில் அதுவும் சுகாதாரமற்று இருந்த சாலையில் இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீரத்தில் நீ ஒரு ஆண் எனும்போது பெண்கள் பெருமைப்படுகிறார்கள். அதே சமயம் சில நேரங்களில் நீயெல்லாம் பெண்ணா நீ ஒரு ஆண் என்று பேசினால் கோபப்படுகிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நமக்கெதுக்கு வம்பு