லிஃப்ட் வேணுமானுன்னு கேட்டாங்க..! நம்பி ஏறுனேன்..! 3 பேர் மாறி மாறி..! காதலனுக்காக காதலி வெளியிட்ட பகீர் தகவல்!

காதலனுக்கு எதிராக சாட்சி அளித்தவர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக போலியாக புகார் கூறிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது காதலன் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து நீதிமன்றத்தில் அப்பெண்ணின் காதலனுக்கு எதிராக 3 பேர் காட்சி அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் அவரது காதலியான இளம்பெண் காவல்துறையினரிடம் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் ஹரி பர்வட் பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சி பெற்று வருவதாகவும் மையத்தில் இருந்து தனிமையில் வந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த கார் எனக்கு லிப்ட் தருவதாக கூறினார்கள்.

நான் நம்பி காரில் ஏறியதும் 3 நபர்கள் தன்னை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர்.இதையடுத்து காவல் நிலையத்திற்கு இளம்பெண்ணை அழைத்து அவர்களை அடையாளம் காட்டும்படி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதையடுத்து காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண் அவர்கள் மூவரையும் அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த 3 நபர்களும் தங்கள் மீது ஏற்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது காவல்துறையினரும் விவாதம் செய்துள்ளனர்.இதையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் முதலில் இளம்பெண்ணிடம் விசாரணையை தொடங்கினர் அதற்கு இடம் மற்றும் காரின் எண் போன்றவற்றை கேட்ட போது அவர் முன்னும் பின்னுமாக காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அப்பெண்ணிடம் மேலும் விசாரணையை தொடங்கிய போது அவர்கள் மீது கூறிய குற்றச்சாட்டு பொய் என்பதை அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஏன் இந்த மாதிரியான பொய்யான புகாரை கொடுத்தீர்கள் என காவல்துறையினர் கேட்டபோது அப்போது தனது காதலனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறிய 3 நபர்களை பழிவாங்கவே தான் இவ்வாறு செய்ததாக காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மற்றும் இந்த வழக்கை திசை திருப்பவே தான் இவ்வாறு செய்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.