என் ஆஃபிஸ் சேம்பரில்..! எனக்கும்..! அந்த மாதிரி தொந்தரவு நடந்துள்ளது! பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அதிர வைக்கும் சீக்ரெட்1

டெல்லி: ''எனது அலுவலகத்திலேயே பலமுறை பாலியல் தொல்லையை சந்தித்துள்ளேன்,'' என்று பெண் ஐஏஎஸ் அதிகாரி வேதனை தெரிவித்துள்ளார்.


டெல்லி வடக்கு முனிசிபாலிட்டி கமிஷனராக பணிபுரியும் வர்ஷா ஜோஷி என்பவர்தான் இந்த அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். அவரிடம், ட்விட்டரில் வாசகர்கள் சிலர், வட இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி என ஆலோசனை கேட்டனர்.

அப்போது, யாரும் எதிர்பாராவிதமாக, ஜோஷி, தானும் இத்தகைய பாலியல் தொல்லையை சந்தித்து வருகிறேன், எனக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''வட இந்தியாவில் 24 மணிநேரமும் பெண்கள் பாதுகாப்பில்லாத சூழலில் வசித்து வருகிறார்கள்.

பாலியல் தொல்லை எந்த இடத்திலும் நடந்து விடுகிறது. நானும், எனது அலுவலக அறைக்குள்ளேயே ஆண்களால் இத்தகைய தொல்லைக்கு ஆள்பட்டு வருகிறேன். எனக்கு ஆண்களின் மனநிலை பற்றி புரியவே இல்லை.

அவர்கள் ஏன் இப்படி பணியிடத்தில்கூட பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்யும் எண்ணத்தில் உள்ளனர் என நான் பலமுறை எண்ணி பார்த்துள்ளேன். எனக்கும் இதுபற்றி தீர்வுகள் தேவை,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஐஏஎஸ் அதிகாரியே பாலியல் தொந்தரவு பற்றி ட்வீட் வெளியிட்டுள்ளது ட்விட்டர் வாசகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.