மாதவிடாய் காலம் குறைகிறது! நகர்புற பெண்கள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

மாதவிடாய்


அதிகரித்து வரும் மன அழுத்தங்கள் நகர்ப்புறப் பெண்களின் உயிரியல் சுழற்சியான மாதவிடாய்க் காலங்களை குறைக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது எழுந்துள்ளது.

 சத்வம் என்ற அமைப்பானது, கடந்த ஐந்து வருடங்களாக பெண்களின் மாதவிடாய் நிறுத்தக் காலத்தினைப் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு பின் வருமாறு

ஆராய்ச்சிக்கு கணக்கெடுக்கப்பட்ட 980 பெண்களில், 264 பேர் 40 வயதுக்கு மேலும், 216 பேர் 35-40 வயதுக்குள்ளும், 432 பேர் 30-35 வயதுக்குள்ளும், 68 பேர் 25-30 வயதுக்குள்ளும் இந்த நிலையை எட்டியதாகத் தெரியவந்தது.

இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 10 ஆண்டுகள் குறைவான காலகட்டத்தைக் குறிக்கின்றது.▪