வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே! ராஜாவோட சேர்ந்து வெள்ள பிள்ளை பெத்தாளே! சூர்யா பாடலுக்கு புடவைகள் போர்க்கொடி!

காப்பான் படத்தில் இருந்து இன்று புதிதாக ஒரு பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.


உடனே புரட்சிப் பெண்கள் குரூப் அந்தப் பாடலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அதனால், அந்தப் பாடலுக்கு கிராக்கி அதிகரித்து ஏராளமான பேர் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  சிறுக்கி சீனிக்கட்டி என்று தொடங்கும் அந்தப் பாடலில், வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே... ஆனா, ராஜாவோட சேர்ந்து வெள்ள பிள்ளை பெத்தாளே... கிரிஜா கோயிலத்தான் சுத்தி வந்தாளே..

ஆனா, ஜோடி தேடி ஆளில்லாம காஞ்சி நின்னாளே... தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால்ல...‘ என்று ஒரு குத்துப்பாட்டு வெளியாகியுள்ளது. இந்தப் பாட்டில் வனஜா, கிரிஜாவை சூர்யா ரொம்பவும் அவமானப்படுத்தி விட்டாராம். பெண்கள் யாருடன் வேண்டுமானாலும் சுற்றலாம், யாருடன் சேர்ந்து வேண்டும் என்றாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு அவமானப்படுத்த வேண்டும் என்று புரட்சிப் பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

ஒரு படம் எடுத்து, அந்தப் பாட்டை பிரபலமாக்க எவ்வளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு, இந்தப் புரட்சி பெண்கள் சர்வசாதாரணமா இப்படி விளம்பரம் பண்றாங்களே என்று காப்பான் குரூப் செம ஹேப்பி மச்சி..  பெண்களே விட்றாதீங்க....