பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து பெரம்பலூரிலும் கல்லூரி மாணவிகள் திருமணமான பெண்களை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில், அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்டோர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூரிலும் பொள்ளாச்சி கொடுமை! மாணவிகளை அனுபவித்து வீடியோ! சிக்கப்போகும் அரசியல் தலைகள்!

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தலிடம் கடந்த 21ம்தேதி வழக்கறிஞரான அருள் என்பவர் ஒரு புகாரை அளித்தார். பெரம்பலூர் அ.தி.மு.க. பிரமுகர், லோக்கல் டி.வி.யில் மூத்த செய்தியாளர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரும் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளை வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்து சென்று மிரட்டி உல்லாசம் அனுபவித்ததோடு அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஏ.டி.எஸ்.பி.யான ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படுவதாக எஸ்.பி. தெரிவித்தார்.. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த தகவலின்படி தங்களுக்கு நெருக்கமான முக்கிய பிரமுகர்களிடமும் இணக்கமாக நடந்து கொள்ள போலி செய்தியாளரும் அ.தி.மு.க. பிரமுகரும் வற்புறுத்தியதும், மறுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்டோர் மீது பெண்களின் மானத்துக்கு பங்க ஏற்படுத்துதல், மிரட்டுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.