ஒரே வீட்டிற்குள் 19 கர்ப்பிணி பெண்கள்! குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை! விலையை கேட்டு அதிர்ந்த அதிகாரிகள்!

நைஜீரியாவில் குழந்தை விற்பனை செய்யும் தொழில் நடத்த ஒரு பெண்களை வைத்து ஒரு தொழிற்சாலையே நடத்திய திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றுள்ளது.


நைஜீரியாவின் லாகோஸ் நகரத்தில் பல பெண்கள் கடத்தி வரப்பட்டு ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் பல ஆண்களால் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அப்படி செய்தும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் மேலும் பல ஆண்களை அழைத்து வந்து பலமுறை சீரழித்துள்ளனர்.

இதற்கு சம்மதிக்காத பெண்களை சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் கர்ப்பம் அடைந்து பிறக்கும் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சந்தையில் விற்று விடுகின்றனர். இந்த தகவல் அனைத்தும் அங்கிருந்த தப்பி வந்து போலீசாரிடம் தஞ்சம் அடைந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பல பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியும், சிலர் கடத்தப்பட்டு இங்கு அழைத்து வரப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு அதிக தொகை கூறுவதாக ஆசை வார்த்தை கூறுவதாகவும் அதுபோல் பணமும் தருவதில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் இங்கிருக்கும் பெண்கள் சிலர் விபச்சார தொழிலுக்காக விற்கப்படுவதாகவும் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட பெண். லாகோஸ் நகரம் மட்டுமின்றி நைஜீரியாவின் பல நகரங்களின் இந்த கொடூர சம்பவம் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கடந் ஓர் ஆண்டில் மட்டும் 160 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் அதிரச்சி தகவல் தெரிவிக்கின்றனர்.