தினமும் லட்டு சாப்பிடச் சொல்றது ஒரு குத்தமாய்யா? நீதிமன்றத்தில் விவாகரத்துக்குக் காரணமான லட்டு விவகாரம்!

தினமும் லட்டு மட்டுமே சாப்பிட தருகிறாள் யுவர் ஆனர்! விவாகரத்து கேட்ட கணவன்.


மீரட்டில் இருக்கும் குடும்பநல நீதிமன்றத்திற்கு ஒரு விவாகரத்து வழக்கு வந்திருக்கிறது. அதில்,விவாகரத்துக் கேட்க கணவன் சொன்ன காரணம் அந்த நீதிமன்றைத்தையே அதிசயிக்க வைத்து விட்டது.அந்த தம்பதிகளுக்குத் திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் வேறு பிறந்திருக்கின்றன்.இந்த நிலையில் குடும்பநல நீதி மன்றதில் தன் மனைவி தனக்கு உணவாக காலையில் நான்கு லட்டுகளும்,மாலையில் நான்கு லட்டுகளும் மட்டுமே தருவதாகவும்,தான் வேறு எதையும் சாப்பிட அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

மனைவியை அழைத்து விசார்த்தால்,அந்தப் பெண்ணும் எதையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு விட்டார்.தன் கணவனுக்கு சில வருடங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதால் நான் ஒரு 'தாந்திரிக்'இடம் ஆலோசித்தேன்,அவர் சொன்னபடியே என் கணவருக்கு லட்டு மட்டுமே கொடுத்து வருகிறேன்.என்று சொல்லி விட குழம்பிப் போன நீதிமன்றம் அவர்களை கவுன்சிங்குக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

அவர்களின் கவுன்சிலருக்கு அவர்களை சேர்ந்து வாழவைக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.' அந்த பெண் தந்திரி சொன்னதை அப்படியே அமல் படுத்தி உள்ளார்.அந்த மூட நம்பிக்கையில் இருந்து அவரை வெளிக்கொணர வேண்டும்' என்கிறார்.